சஹஜயோகா தியானம் என்பதென்ன?

உலகம் முழுவதும், மனிதர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நம்பி அவர்கள் புதிய தயாரிப்புகள், மருந்துகள் மற்றும் தொழில்நுட்பத்தை நாடிவருகின்றனர். பெரும்பாலானவர்களுக்கு  தங்களுள் ஆழமான பகுதியில்  மிகவும் சக்திவாய்ந்ததும் நிலைமாற்ற ஆற்றலும் வசிக்கிறது என்று தெரியாது. உங்கள் ஆழத்தில் உள்ள இந்த சக்தியையும்  ஆற்றலையும் தட்டியெழுப்ப இங்கு ஒரு எளிய முறை இருக்கும் பட்சத்தில், அது உங்களை உணர்வுபூர்வமாகவும், உடல் மற்றும் மன ரீதியாகவும் நன்றாக மேம்படுத்த வகை செய்யுமா?  சஹஜ யோகா தியானம் அப்படிப்பட்டது தான் - அந்த அமைப்பிற்குள் வழிநடத்தப்பட்ட மனத் தளர்வு  மற்றும் உள் சமநிலை உத்திகள் நிறைந்து, அதன் வாயிலாக  ஒரு ஆழ்ந்த ஆன்மீகம் மற்றும் உணர்வுபூர்வமான அமைதி, ஆரோக்கியம் மற்றும் தெளிவை அளிக்கிறது. சகஜ தியானம் முதன் முதலில் ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவியால் 1970-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட உலக  நாடுகளில் சஹஜ வழிமுறையைப் பின்பற்றி வருகின்றனர். சகஜ நுட்பத்தைச் சரியாக பயின்று வந்தால் நீங்கள் உங்கள் விரல் நுனியில் ஆற்றலான  அதிர்வுகளை உணர முடிகிறது. சகலத்தையும் உள்ளடக்கியுள்ள தெய்வத்தன்மையை ஒரு  நுட்பமான குளிர்ந்த காற்றாக இன்னும் தீவிரமாக உணர முடிகிறது. சுய விழிப்புணர்வு ஞானத்திற்கு ஒரு முக்கிய திறவுகோலாக பல சிறந்த ஆன்மீக மரபுகளில் அமைந்துள்ளது. சஹஜ தியானம் உங்களை ஒரு ஆழமான மற்றும் முழுமையான ஆன்ம ஞானத்தை அடைய உதவுகிறது.
 
எப்படி சஹஜ தியானம் சுய விழிப்புணர்வவை மேம்படுத்தச் செய்கிறது?
 
சஹஜ தியானத்தில், தூய்மைப்படுத்தவும், சமநிலைப்படுத்தவும்,  ஆற்றல் மையங்களாகிய சக்கரங்களை  ஊட்டமளிக்கவும் எளிய நுட்பங்கள் நிறைந்துள்ளன.   ஒவ்வொரு சக்கரமும் உடலில் பல்வேறு பகுதியில் நேரடியாக தொடர்புரீதியாக மட்டுமின்றி,  உள்ளத்தின் பல்வேறு அம்சங்களுக்கும், அத்துடன் ஆன்மாவின்  நன்மைக்காகவும்  அமைந்துள்ளது. உங்கள் சுய ஆற்றல் மற்றும் ஆன்மீக அம்சங்களில் நீங்கள் இன்னும் ஆழமாக அறிந்து கொள்வதன் மூலம் - மன அமைதி படிப்படியாக உருவாக்குவதின் மூலம் - சஹஜ தியானம் "நின்று தவிக்கும் நிலையோ அல்லது குறைந்த கண்ணோட்டங்களைக் கொண்ட மனோபாவங்களைக்  கடக்க உங்களுக்கு உதவி செய்கிறது. அது உங்களை ஆழமான உள்மனநிலையில் குண்டலினி சக்தியை விழிப்பூட்டி, பின்னர் உங்களை ஒரு சக்திவாய்ந்த நிலையான எண்ணங்களற்ற விழிப்புணர்வுக்கு உறைவிடமாக செயல்படுகிறது .
 
தியானம் எப்படி உங்கள் மனதை தெளிவுபடுத்துகிறது?
 
"எண்ணங்களற்ற விழிப்புணர்வு" மூலம் இறுதியில்  என்ன எழுவதென்றால்  சக்திவாய்ந்த, தெளிவான  கவனம். எண்ணங்கள் என்பது கடந்த காலத்தைப் பற்றியோ அல்லது வருங்காலத்தைப் பற்றியோ ஆகும். நிகழ் காலத்தில் எண்ணங்கள் என்பது இல்லை. ஏனென்றால் நிகழ் காலம் என்பது நடந்து கொண்டிருக்கின்ற ஒரு செயலாகும். கடலில் அலைகள் தோன்றி மறைவது போலத்தான் எண்ணங்களும். ஒரு எண்ணம் மறைந்து அடுத்த எண்ணம் தோன்றுவதற்குள் இடைவெளி ஏற்படுகிறது. அதை தியானம் செய்யும் போது உணரலாம் . ஆரம்ப காலத்தில் சில வினாடிகளே இவ்வாறு உணர முடியும். யோக சாதனை அதிகரிக்கும் பொழுது இந்த எண்ணங்களற்ற இடைவெளி நேரமும் அதிகமாகின்றது. இதைத்தான் எண்ணங்களற்ற விழிப்புணர்வு எனக் கூறுகிறோம்.
 
சஹஜ யோகமும் பயிற்சியும் அதன் அணுகுமுறையும்
சஹஜ யோகத்தைக் கற்றுக் கொள்ள முதலில் நாம் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும்.
இதயப் பூர்வமாக இந்த யோகத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தூய்மையான விருப்பம் வேண்டும். பயிற்சி காலத்தில் சிலருக்கு சந்தேகங்கள், கேள்விகள் எழலாம், இருப்பினும் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது நமது கேள்விகளுக்கு விடை தானாகவே கிடைக்கும். பரம சைத்தன்யத்தின் இணைப்பினால் இது நடைபெறுகிறது. கூட்டுத் தியானப் பயிற்சி மையத்தில் குறைந்தது வாரம் ஒரு முறையாவது கலந்து கொள்ள வேண்டும். நாம் தொடர்ந்து கூடு தியானத்தில் பங்கு பெற்றால் சில சுத்திகரிப்பு முறைகளையும் தெரிந்து கொள்ளலாம். தொடர்ச்சியான  பயிற்சிக்குப் பின்பு நமது உள்ளங்கைகளிலும் உச்சந்தலையிலும் குளிர்ச்சியான நுண்ணதிர்வுகளை உணர முடியும். நாம் முழுமையாக பரம் பொருளுடன் (பரம சைத்தன்யம்) இணைக்கப்பட்டுள்ளோமா என்பதைத்  தெரிந்து கொள்ள முடியும். மனிதனின் ஸ்தூல உடலின் செயல்பாடுகள் மட்டுமல்ல, நமது சூட்சும உடலிலுள்ள பண்புகளையும், சக்திகளையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். இதன் மொழியையும் பழகிக் கொள்ள முடியும் தெய்வீக சக்தியையும் உணர முடியும்.
 
சஹஜ தியானப் பயிற்சியின் பயன்கள் யாவை?  
 
இப்பயிற்சிக்குப் பின் சர்க்கரை வியாதி, இதய நோய், மூட்டுவலி, ஆஸ்துமா, புற்று நோய் போன்ற தீராத நோய்களும் குணமடைகின்றன. இவைகள் உடலில் வெளிப்படுவதற்கு முன்பாகவே நுண்ணதிர்வுகள் மூலம் அவற்றை முற்றிலும் வளராமல் தடுக்க முடியும் மற்றும் எல்லாவித நோய்களையும் குணமாக்க முடியும்.

சஹஜ யோகத்தைச் செய்தபின் அது உங்களுக்கு சரியானதா என்று பாருங்கள்.
 
வெவ்வேறு வகையான தியானங்கள் மக்களை ஈர்க்கிறது. சஹஜ தியானம் உங்களுக்கு ஏற்றதா என்று அனுபவித்துக் கண்டுபிடிக்க ஒரே வழி, அதை நீங்களே முயற்சி செய்து பார்ப்பதாகும். இதற்காக கொஞ்சம்  நேரம்  எடுத்துக்  கொண்டு இதை இலவச ஆன்லைன் சஹஜ தியானப் பயிற்சி  மூலமாகவோ அல்லது சஹஜ  தியானத்தை ட்விட்டர் அல்லது பேஸ்புக் வாயிலாகவோ பின்பற்றுங்கள். மேலும் நீங்கள் சஹஜ தியானத்தைப் பின்பற்றவர்கள் எழுதிய  விமர்சனங்களைப் படியுங்கள்