சஹஜ யோகாவின் புதிய சகாப்தம்

சஹஜ யோகாவின் முதல் சகாப்தம் முடிந்து, சஹஜ யோகாவின் புதிய சகாப்தம் ஆரம்பித்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். முதல் சகாப்தத்தில் தொடக்கமாக இருந்தது சஹஸ்ராரத்தின் திறப்பு, அதாவது குண்டலினியின் விழிப்புணர்ச்சி, மற்றும் உச்சிக்குழி எலும்பு துளைத்தல்.

நாங்கள் உங்கள் சக்தி மையங்களிலுள்ள (நீள்வளைய மைய விழையத்திலும் மூளையிலும்) தெய்வங்களை விழிப்படைய செய்தோம். இப்போது நாம் கிடைத்தள நிலையிலும் அதைப் பரப்ப வேண்டிய நிலை வந்துவிட்டது.

உங்கள் கவனத்தை சஹஸ்ராராவில் வைக்க வேண்டுமெனில், முதலில் நீங்கள் உங்கள் இருதயத்தில் உங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும். சஹஸ்ராரத்தில், அனாஹாத சக்கரத்தில் ள் இருதயமும், ஆத்மா ஐக்கியமாகிறது. அப்படியென்றால் ஜகதாம்பாள் இதயத்தோடு ஒன்றுபடுகிறார், ஆத்மாவில், மற்றும் யோக நிலையில் உள்ளது.

எல்லா மதங்களிலும், எல்லா தீர்க்கத்தரசிகளுக்கும், எல்லா அவதாரங்களுக்கும் சாரமாக இருக்கும் பரிவானது, இருதய சக்கரத்தில் உள்ளது.

எல்லாம் வல்ல இறைவனிடத்தில் பரிவு இல்லையென்றால் இந்த மாபெரும் பிரபஞ்சத்தை படைத்திருக்க முடியாது. உண்மையில் அவருடைய சக்தி, அதாவது ஆதிசக்தி, அவருடைய பரிவின் (இரக்கத்தின்) திருவுருவமே. இந்த பரிவுதான் நம்மை இந்த மனிதகுல பரிணாம வளர்ச்சிக்குக் கொண்டுவருகிறது, இன்னும் சொல்லப் போனால் சஹஜ யோகிகளாக விமோசனம் பெற்றிருக்கிறோம்.

பரிவு எப்போதும் மன்னிப்பு என்னும் மனநிலையால் சூழ்ந்திருக்கும்.

திரித்துவம் (கடவுளின் திருமூர்த்தி ஸ்வரூபம்) இங்கு சந்திக்கிறது. தேவ குமாரன் (தெய்வ மகன்) மன்னிக்கும் குணத்தின் திருவுருவம். அதனால் சாட்சியாக இருக்கும் எல்லாம் வல்ல இறைவன், கருணை வடிவான தாய், மற்றும் மன்னிப்பின் திருவுருவமாக இருக்கும் தெய்வ மகன் மூவரும், சஹஸ்ராரத்தில் இருக்கும் இருதய சக்கரத்தில் சந்திக்கிறார்கள்.

நீங்கள் நினைப்பது போல் சஹஸ்ராரம் உங்கள் தலையில் உள்ளது, ஆனால் அது அனைத்து பிரபஞ்சத்தின் மையமே. இதை மேம்படுத்த, நாம் உச்சிக்குழி எலும்புப் பகுதியில் இருக்கும் அனாஹாத சக்கரத்தில் கவனம் செலுத்த வேண்டும். அங்கே நீங்கள் கடவுளை நிலைப் பெறச் செய்யலாம். ஆனால் இந்த தெய்வத்தை, நாம் இருதயத்தில் நிலை நாட்ட வேண்டும். உங்களுக்கு தெய்வம் மனித உருவில் இருப்பதால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டமடைந்தவர்கள்.

சஹஸ்ராரத்தில் அவள் மஹாமாயாவாக இருக்கிறார். மஹாமாயாவின் சக்தியை நீங்கள் கற்பனைச் செய்ய முடியாத அளவிற்கு மிகவும் உயர்ந்தது. அதனால் நீங்கள் சரணாகதி அடைய வேண்டும். உங்கள் அறிவிற்கு வரையறை செய்யப்பட் கற்பனைத்திறனால் கடவுளை அறிய முடியாது.

மேலும் அவர் ‘பக்திகம்யா’, அவரை பக்தியின் மூலமும் முழு ஈடுபாட்டுடன் மட்டுமே அவரை அறிய முடியும். மெய்மை முழுமையானது. அதனால் நம் இதயத்திலுள்ள எல்லா அசுத்தங்களையும் நீக்குவதாலேயே அந்த நிலையை அதை அடைய வேண்டும்.

இப்போது ஒரு அவதாரத்தின் வேலை அவருடைய பக்தர்கள் மற்றும் சீடர்களின் ஆசைகளை நிறைவேற்றுவது. அதனால் ஸ்ரீ கிருஷ்ணரின் நிலையில், “யோக க்க்ஷேமம் வஹாம்யமம்” ஆக இருந்தது. க்க்ஷேமமாகிய நலன்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் நிலையில், வாக்களித்தபடி, கவனித்துக் கொள்ளப்பட்டது.

உங்களுக்கு நல்ல குடும்பங்கள், நல்ல அசிரமங்கள், நல்ல வேலைகள் இருக்கிறது, எல்லாரும் மகிழ்ச்சியாக இருகிறார்கள். இப்போது நாம் அடுத்த சகாப்தம் பற்றி சிந்திப்போம். அடுத்த சகாப்தமானது கருணை. ஆனால், இன்னும் உங்கள் சக்கரங்கள் ஏதாவது பலவீனமாக இருந்தால், ஏழு வண்ணங்களால் உருவாகும் வெள்ளை ஒளி, மங்கிவிடலாம் இல்லையெனில் அது பழுதாகியிருக்கும். அதனால் நம்மில் உள்ள எல்லா சக்கரங்களையும் கவனித்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சக்கரத்தின் மீதும் தனி கவனம் செலுத்த வேண்டும், இந்த சக்கரங்களில் இரக்க உணர்ச்சியை நிலை நிறுத்த வேண்டும்.

இப்பொழுது, ஸ்ரீ கணேஷாவின் சக்கரத்தை எடுத்துக் கொள்ளுவோம். இபோழுது உங்கள் உணர்ச்சிகளை இந்த சக்கரத்தில் செலுத்துங்கள். சக்கரம்தான் பிரதேசம், அது தான் நாடு, ஸ்ரீ கணேஷா அதன் அரசன் என்று மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். இப்பொழுது முதல், அந்த சக்கரத்தில் உங்கள் கவனத்தை வைக்கும் பொழுது, அதில் அவரிடம் அன்பும் வழிபாடும் வைக்க வேண்டும். பின்பு, பரிவை வெளிப்படுத்தி நீங்கள், “குற்றமற்ற கடவுளே, அனைத்து உலக மக்களுக்கு தீங்கில்லாத தன்மையைக் கொடுங்கள்என்று கேட்க வேண்டும். ஆனால் முதலில் அதற்கு நீங்கள் தீங்கற்றவர்ராக இருக்க வேண்டும்.

ஒரு வெகுளிக்கு, ஒரு அழகான மனிதனை, அல்லது ஒரு பெண்ணை, அல்லது ஒரு அழகான படைப்பைப் பார்க்கும் பொழுது, முதலில் எண்ணங்களற்ற நிலைக்குப் கொண்டு போக வேண்டும், அப்போது ஒரு எண்ணம் கூட இருக்கக் கூடாது. இப்பொழுது, ஸ்ரீ கணேஷாவிடம் என்ன வேண்டிக்கொள்ள வேண்டும் என்றால்தயவு செய்து, என்னை வெகுளியா மாற்றுங்கள், எனக்கு இந்த வரம் கேட்கும் அதிகாரம் பொருட்டு, ஏனேனில், நான் எங்கு சென்றாலும் இந்த வெகுளித்தனத்தையே வெளிபடுத்த வேண்டும். மக்கள் என்னைப் பார்க்கும் பொழுது நான் வெகுளி என்று அவர்கள் நினைக்க வேண்டும். இது தான் இரக்கம், அவரிடம் இந்த இரக்கத்தின் ஆற்றலை உங்களுக்குக் கொடுக்கக் கேட்பதற்கான இரக்கம்.
 

சஹஜ யோகாவின் முதல் சகாப்தத்தில், நீங்கள் என்னை மனித உருவில் பார்க்கத் தேவைப்பட்டது. சமஸ்கிருதத்தில்த்யேயஎன்று சொல்வது போல, அப்படி என்றால் தமிழில் இலக்கு (குறிக்கோள்) என்று பொருள். உங்களுக்கு நீங்கள் சாதிக்க வேண்டிய இலக்கானது உங்கள் முன்னால் வைக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது இரண்டாவது சகாப்தத்தில், நீங்கள் அன்னை இருக்க வேண்டும் என்று அதிகம் ஆசைப்பட மாட்டீர்கள். நீங்கள் என்னிடம் இருந்து பொறுப்பேற்றுக் கொள்வீர்கள். இது, நான் சொல்வது, தெய்வீக ஆசையாகும். நீங்கள் இன்றிலிருந்து அதில் செயல் பட வேண்டும். நான் உங்களோடு இருக்கிறேன், உங்களுக்கு அது தெரியும். ஆனால் இந்த உடலில் இல்லாமல் இருக்கலாம், ஏனென்றால், நான் இந்த சரீரத்தில் இருக்கிறேனா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் இந்த ஆசை செயல்பட ஆரம்பித்ததும், மிகப்பெரிய அற்புதங்கள் நடப்பதை நீங்கள் காண்பீர்கள்.

அதனால், நீங்கள் என்னை எங்கு வேண்டுமானாலும் காணலாம். தெருவில் நடக்கும்போது, திடீரென்று, மாதாஜி உங்களோடு நடப்பதை பார்க்க நேரிடும். அதனால் இரண்டாவது சகாப்தத்தை நாம் தொடங்கி விட்டோம். நீங்கள் என்னை உங்கள் படுக்கையில் அமர்ந்து உங்கள் தலையில் என்னுடைய கரங்களை வைக்கும்போது, அதிர்ச்சியடையக் கூடாது. இல்லையென்றால், நீங்கள் என்னை கிறிஸ்துவின் வடிவமாக உங்கள் அறைக்குள் நான் நுழைவதைப் பார்க்கலாம். அல்லது, ஸ்ரீ ராமரின் வடிவாக பார்க்கலாம். அது நடக்ககும், அதனால் நீங்கள் அதற்கு தயாராக இருங்கள்.

இந்த சகாப்தத்தில், நீங்கள் பொருள் கேட்பதை நிறுத்திவிடுவீர்கள், மேலும் சூக்ஷுமமான எதைக் கேட்பதும் மறைந்து விடும். மேலும் அத்தருணத்தில் நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக மாறிவிடுவீர்கள். குண்டலினியின் வேலை முடிந்து விட்டது. இப்பொழுது கருணையின் வேலை, பிறருக்கு பரப்பும் வேலையை நீங்கள் செய்ய வேண்டும்.

முழுமையான சரணடைந்த மனதோடு, நீங்கள் இந்த மாளிகையின் புனித யாத்திரையில் செல்ல வேண்டும்.

சஹஜ யோகாவில் நீங்கள் முன்னேறுகிறீர்களா என்று பின்வரும் அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்:

  • யாராவது உங்களைத் தாக்கும் பொழுது, நீங்கள் மிகவும் அமைதியாக இருந்தால், உங்கள் கோபம் காற்றாக மறைந்தால், நீங்கள் நன்றாக முன்னேறுகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • கடும் சோதனையும், பேராபத்தும் உங்கள் மீது வரும் பொழுதுகூட, நீங்கள் அதைப்பற்றி வருத்தப்படாமல் இருந்தால் நீங்கள் நன்றாக முன்னேறுகிறீர்கள்.

  • எந்த அளவு செயற்கைத்தனமும் உங்களை கவர்ந்து திசை திருப்பாமல் இருந்தால், நீங்கள் நன்றாக முன்னேறுகிறீர்கள்.

  • பிறரிடம் இருக்கும் செல்வாக்கு உங்களை கவலை படுத்தாமல் இருந்தால், நீங்கள் நன்றாக முன்னேறுகிறீர்கள்.

  • ஒரு சஹஜ யோகியாக மாறுவதற்கு கடினமான உழைப்பும், தொல்லைகளும் தேவையில்லை, உங்களுக்கு எந்த முயற்சியும் இல்லாமல் கிடைத்திருக்கிறது. அதனால் நீங்கள் சிறப்பு வாய்ந்தவர்கள்.

  • நீங்கள் சிறப்பு வாய்ந்தவர்கள் என்று உணர்ந்துவிட்டால், நீங்கள் அதைப் பற்றி மிகவும் எளிதாக ஏற்றுக் கொள்வீர்கள். பிறகு, அது நடக்கும் பொழுது, பணிவாக மாறும் பொழுது அதாவது நீங்கள் உங்களிடம் சில சக்திகள் இருக்கிறது என்று உணர்ந்து, நீங்கள் தீங்கற்ற தன்மையை வெளிபடுத்தும் பொழுது, நீங்கள் நளினமானவராக மாறும்போது நீங்கள் மிகவும் கருணைமிக்கவராகவும், பணிவானவராகவும், இனிமையானவராக மாறும்போது, நீங்கள் ஸ்ரீமாதாஜி உங்கள் இருதயத்தில் இருக்கிறார் என்று நம்பத்தான் வேண்டும்.

  • அதனால், நீங்கள் விரைவாக வளருவீர்கள், அதாவது தியானத்தில் இல்லாமல், தியான நிலையில் இருப்பீர்கள். என்னுடன் இல்லாமலே, என்னுடன் இருப்பீர்கள். நீங்கள் கேட்காமலே, றைவனிடம் அருளைப் பெறுவீர்கள்.

  • இதற்குதான் நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். மறுபடியும் உங்களை, இந்த சிறந்தசஹஸ்ராரத்தில்', இன்று இந்த நன்னாளில் உங்களை புதிய சகாப்தத்திற்கு வரவேற்கிறேன்.