சமநிலைப்படுத்தும் பயிற்சி

நமது உடலிலுள்ள மைய நரம்பு மண்டலத்தில் மூன்று நாடிகள் செயல்பட்டுக் கொண்டுடிருக்கின்றன. இடது பக்கத்தில் உள்ள நாடி இட நாடியாகும். இது இச்சா சக்தியையும் கடந்த காலத்தின் எண்ணங்களையும் தேக்கி வைத்துள்ளது. வலது பக்கத்திலுள்ளது  பிங்கல நாடி எதிர்கால எண்ணங்களை வெளிப்படுத்துகிறது. இது க்ரியா சக்தியாக அமைந்துள்ளது. மையத்திலுள்ள நாடி மைய நாடி என்பதாகும். இது நிகழ்கால செயல்களைக் குறிக்கிறது. நமது எண்ணங்களை அதிகமாக கடந்த காலத்தைப் பற்றியதாக இருப்பின் இட நாடி பாதிப்படையும் அல்லது எதிர்கால எண்ணங்கள் அதிகமாக இருப்பின் பிங்கல நாடி பாதிப்படையும். இவைகளைச் சமநிலைப் படுத்தவேண்டும்.

1.       இரண்டு கைகளையும் பூமி மீது வைத்துக் கொண்டு உடலிலுள்ள எல்லா எதிர்மறை சக்திகளை பூமி மாதா ஈர்த்துக் கொள் வேண்டும் வேண்டிக் கொள்வோம்.

2.       வலது கை பூமியின் மீது வைத்துக் கொள்ள வேண்டும், இடது கை அன்னையின் படத்தை நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இடது பக்கம் கவனத்தைச் செலுத்தி நமது உடலில் இடப் பக்கத்திலுள்ள ல்லா எதிர்மறை சக்திகளையும் தடைகளையும் பூமித்தாய் ஈர்த்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்வோம்.

3.       வலது கை அன்னையின் படத்தை நோக்கி வைத்துக் கொண்டு இடது கை உள்முகமாக ஆகாயத்தை நோக்கி வைக்க வேண்டும். கவனத்தை பிங்கள நாடியில் நிறுத்தி நமது உடலில் வலப் பக்கத்தில் உள்ள எதிர்மறை சக்திகளை ஆகாயத்தில் வெளியேற்றுமாறு வேண்டிக் கொள்வோம்.

4.       இரண்டு கைகளையும் அன்னையின் படத்தை நோக்கி வைத்துக் கொண்டு நமது கவனத்தை மைய நாடியில் நிறுத்தி மைய நாடியிலுள்ள எல்லா எதிர்மறைச் சக்திகளும் நீக்குமாறு வேண்டிக் கொள்வோம்.

பொதுவாக தியானத்திற்கு முன்பு சமநிலைப்படுத்துதல் செய்ய வேண்டும்.