சக்கரங்கள், தத்துவங்கள் மற்றும் மந்திரங்கள்

சஹஜ தியானம் செய்வதால் ஏற்படும் குணங்கள்:

குழந்தை மனம், விவேகம், அடக்கம், விசுவாசம், தானாக ஏற்படும் செயல், பகுத்தறிதல். தோற்றுவித்தல், தெய்வீகத் தூண்டுதல், கலையுணர்வு, உண்மையை அறியும் திறன் (தெய்வத்தன்மையை உணருதல்), புத்தி கூர்மையுடன் கூடிய ஆற்றல். உடலுக்கும், வாழ்க்கைக்கும், ஆன்மாவுக்குரிய ஊட்டம்,  பூரண திருப்தி, தாராள மனப்பான்மை, நாணயம், தூய்மை. அன்பு, பெருமகிழ்ச்சி, பாதுகாப்பு, ஆதரவு, கடமையுணர்வு, பகிர்ந்து கொள்ளுதல், பொறுப்புணர்வு, தைரியம். ஒன்றுபட்ட உணர்வு நிலை, தெய்வீக ராஜ தந்திரம், அணுகுமுறை, புத்திசாலித்தனம், தன்மான உணர்வு, சாட்சிபாவம்.           

மன்னிக்கும் குணம், அகங்காரமற்ற தன்மை, நிபந்தனைகளற்ற தன்மை, தியாக மனப்பான்மை.
மெய்ஞ்ஞான உணர்வு, எல்லாத் தத்துவங்களும் ஒருங்கிணைந்த ஒருமைப்பாடு, அமைதி. 

அ. மூலாதாரம்

தெய்வம் :          இடது  : ஸ்ரீ நிர்மல் கணேஷா  
                          நடு     :  ஸ்ரீ கணேஷா  
                          வலது  :  ஸ்ரீ நிர்மல் கார்த்திகேயா
மந்திரம்  :           ஓம் த்வமேவ சாக்க்ஷாத் ஸ்ரீ கணேஷா சாக்க்ஷாத்
                          ஸ்ரீ ஆதி சக்தி மாதாஜி ஸ்ரீ நிர்மலாதேவி நமோ நமஹா  

நடுச்சக்கரங்களில் நாம் கூற வேண்டியவை :

(Mooladhara) மூலாதாரம் :   ஸ்ரீ மாதாஜி! தயவு செய்து எனக்கு குழந்தைத் தன்மையைக் கொடுங்கள் குற்றமற்றவன் (Innocent) ஆக வைத்திருங்கள்.  

இடது மூலாதாரம் (Left Mooladhara) : ஸ்ரீ மாதாஜி!  உங்கள் அருளினால் நான் குழந்தை போன்று கள்ளம், கபடம் இல்லாமல் இருக்கின்றேன்.(I am the  powerful innocence of a child).

வலது மூலாதாரம் (Right Mooladhara)   : ஸ்ரீ மாதாஜி! நீங்களே தீமைகளையும், எதிர்மறை சக்திகளையும் அழிப்பீர். (You are the slayer of devils)

குண்டலினி  மூலாதாரம்

தெய்வம் :   ஸ்ரீ கௌரி மாதா
தத்துவம் :    கற்பு நெறி
                   தாயன்பு
மந்திரம்  :    ஓம் த்வமேவ சாக்க்ஷாத் ஸ்ரீ கௌரி மாதா சாக்க்ஷாத்
                   ஸ்ரீ ஆதி சக்தி மாதாஜி ஸ்ரீ நிர்மலாதேவி நமோ நமஹா.


ஆ.  ஸ்வாதிஷ்டானம்

தெய்வம் :           இடது     : ஸ்ரீ நிர்மல் வித்யா
                           நடு         : ஸ்ரீ பிரம்ம தேவ சரஸ்வதி     
                           வலது     : ஸ்ரீ லக்ஷ்மணா
மந்திரம் :             ஓம் த்வமேவ சாக்க்ஷாத் ஸ்ரீ பிரம்ம தேவ சரஸ்வதி சாக்க்ஷாத்
                           ஸ்ரீ ஆதி சக்தி மாதாஜி ஸ்ரீ நிர்மலாதேவி நமோ நமஹா.

நடுச்சக்கரங்களில் நாம் கூற வேண்டியவை :

ஸ்வாதிஷ்டான் (Swadisthan) :   ஸ்ரீ மாதாஜி! தயவு செய்து எனக்கு (Creative Knowledge) தூய்மையான அறிவையும் படைப்பாற்றலையும் கொடுங்கள்.   


இடது ஸ்வாதிஷ்டான் (Swadisthan) :  ஸ்ரீ மாதாஜி!  உங்கள் அருளினால், நான் கடவுளிலிருந்து வரக்கூடிய தூய்மையான  அறிவாக இருக்கிறேன். (I am the pure knowledge/technique of the Divine that acts).
       
வலது ஸ்வாதிஷ்டான் (Swadisthan) : ஸ்ரீ மாதாஜி! நான் எதுவும் செய்யவில்லை. நீங்களே அனைத்தையும் செய்கிறீர்கள். நீங்களே மகிழ்ந்து அனுபவிக்கிறீர்கள். (You are the doer & you are the enjoyer).   


இ. மணிபூரகம் (நாபி)   

தெய்வம் :             இடது     : ஸ்ரீ கிரஹ லக்ஷ்மி              
                             நடு         : ஸ்ரீ லக்ஷ்மி விஷ்ணு
                             வலது      : ஸ்ரீ ராஜ லக்ஷ்மி
மந்திரம் :               ஓம் த்வமேவ சாக்க்ஷாத் ஸ்ரீ லக்ஷ்மி விஷ்ணு சாக்க்ஷாத்
                             ஸ்ரீ ஆதி சக்தி மாதாஜி ஸ்ரீ நிர்மலாதேவி நமோ நமஹா.

நடுச்சக்கரங்களில் நாம் கூற வேண்டியவை :

நாபி (Nabhi) : ஸ்ரீ மாதாஜி! தயவு செய்து எனக்கு நிறைவான வாழ்கையைத் தாருங்கள் (Make my life satisfied)        
               
(Void) வாய்ட் :  ஸ்ரீ மாதாஜி! எனக்கு குருவாக இருக்கச் செய்யுங்கள். (Make me my own Guru/Master).

இடது நாபி(Nabhi) :   ஸ்ரீ மாதாஜி!  உங்கள் அருளினால் நான் திருப்தி அடைந்தவனாக/அடைந்தவளாக இருக்கிறேன்.  (I am satisfied)      
       
(Void) வாய்ட் :  ஸ்ரீ மாதாஜி! உங்கள் அருளினால் நான் தூய்மையான  அறிவாக இருப்பதால், நானே எனது குருவானேன். (As I am the Pure knowledge  I am my own Guru).

வலது பக்கம் (Nabhi) நாபி : ஸ்ரீ மாதாஜி!  நீங்கள் எனது பணப்பிரச்னை / குடும்பக் கவலைகள் எல்லாவற்றையும் நீக்கி எனது நன்மையைப் பாதுகாக்கிறீர்கள். (You solve my money/family worries and take care of my well-being).

(Void) வாய்ட் :  ஸ்ரீ மாதாஜி!  நீங்களே எனது குரு.  ( you are மி Guru/Master).

பவ சாகரம் (மாயை)

தெய்வம்:   அதிதேவதை ஆதிகுரு தத்தாத்ரி யேயர் மற்றும் ஆப்ரஹாம், மோசஸ் , லாவோட்சே , ஜனகர் , குருநானக், முகமது நபி, ஷீரடி சாய்நாத், கன்ப்யுசியஸ், சாக்ரட்டீஸ் ஆகிய போதகர்கள் ஆதிகுருமார்களாக இந்த சக்கரத்தில் அமைந்திருக்கிறார்கள்.
இடது     :    ஜனகா, ஆபிரகாம், லாவோட்சே, சரதாஸ்ட்ர, சாயிநாத்.     
நடு        :     ஸ்ரீ லக்ஷ்மி விஷ்ணு
வலது     :    மோஸஸ், நானகா, சாக்ரடீஸ், கன்ப்யூசியஸ், முகம்மது             
மந்திரம்  :    ஓம் த்வமேவ சாக்க்ஷாத் ஸ்ரீ ஆதி குரு தத்தாத்ரேயா சாக்க்ஷாத்
                      ஸ்ரீ ஆதி சக்தி மாதாஜி ஸ்ரீ நிர்மலாதேவி நமோ நமஹா.


   ஈ. அனாஹதா (இருதயம்)

தெய்வம் :            இடது  :  ஸ்ரீ சிவ பார்வதி
                            நடு     : ஸ்ரீ துர்கா மாதா
                            வலது : ஸ்ரீ சீதா ராமா
மந்திரம் :              ஓம் த்வமேவ சாக்க்ஷாத் ஸ்ரீ ஜெகதாம்பா சாக்க்ஷாத்
                            ஸ்ரீ ஆதி சக்தி மாதாஜி ஸ்ரீ நிர்மலாதேவி நமோ நமஹா.

நடுச்சக்கரங்களில் நாம் கூற வேண்டியவை :

இருதயச் சக்கரம் (Central Heart) : ஸ்ரீ மாதாஜி! தயவு செய்து எனக்கு தன்னம்பிக்கையும்  தைரியத்தையும் கொடுங்கள்.  
இடது இருதயச் சக்கரம் (Heart) :  ஸ்ரீ மாதாஜி! உங்கள் அருளினால் நான் தூய்மையான ஆன்மாவே தான். (Shri Mataji by your grace I am the pure spirit).                                                            
வலது இருதயச் சக்கரம் (Heart) :  ஸ்ரீ மாதாஜி! நீங்களே எனக்குள் உள்ள பொறுப்புணர்வு ஆவீர்கள் (responsibility in me), ஸ்ரீ மாதாஜி! நீங்களே நன்னடத்தையின் எல்லையாகவும் நல்ல தந்தையின் வெகுமதியாகவும்  இருக்கிறீர்கள். (You are the boundaries of good conduct & the benevolance of good father).
 

உ. விஷுத்தி

தெய்வம் :          இடது  :  ஸ்ரீ விஷ்ணு மாயா
                          நடு     : ஸ்ரீ ராதா கிருஷ்ணா
                          வலது : ஸ்ரீ யசோதா மாதா
மந்திரம் :            ஓம் த்வமேவ சாக்க்ஷாத் ஸ்ரீ ராதா கிருஷ்ணா சாக்க்ஷாத்
                          ஸ்ரீ ஆதி சக்தி மாதாஜி ஸ்ரீ நிர்மலாதேவி நமோ நமஹா.

நடுச்சக்கரங்களில் நாம் கூற வேண்டியவை :

விஷுத்தி சக்கரம் (Visuddhi) :  ஸ்ரீ மாதாஜி! தயவு செய்து எனக்கு சாட்சி பாவத்தை (Detached witness) கொடுங்கள்.

இடது பக்கம் (Visuddhi)  விஷுத்தி சக்கரம் :  ஸ்ரீ மாதாஜி! உங்கள் அருளினால், நானே ஆன்மாவாக  இருப்பதால், நான் எவ்வாறு குற்ற உணர்வுடன் இருப்பேன்? (As I am the spirit, how can I feel guilty?).   

வலது பக்கம் (Visuddhi)  விஷுத்தி சக்கரம் :  ஸ்ரீ மாதாஜி! நீங்களே எனது இனிமையான வார்த்தைகளுக்கும்,  இனிமையான  நடத்தைக்கும்  காரணமாக இருக்கின்றீர்கள். (You are the sweet cause of my words & deeds).


ஊ. ஆக்ஞா    


தெய்வம் :             இடது      :  ஸ்ரீ மஹாவீரா
                             நடு         : ஸ்ரீ மஹா விஷ்ணு ( இயேசு மேரி மாதா)
                             வலது      : ஸ்ரீ புத்தா
மந்திரம் :               ஓம் த்வமேவ சாக்க்ஷாத் ஸ்ரீ ஜீஸஸ் மேரி மாதா சாக்க்ஷாத்
                             ஸ்ரீ ஆதி சக்தி மாதாஜி ஸ்ரீ நிர்மலாதேவி நமோ நமஹா.

நடுச்சக்கரங்களில் நாம் கூற வேண்டியவை :

(Agnya chakra) ஆக்ஞா சக்கரம் :  ஸ்ரீ மாதாஜி!  தயவு செய்து எனக்கு மன்னிக்கும் சுபாவத்தையும் தியாக மனப்பான்மையும் கொடுப்பீர்களாக. (Make me a forgiving & sacrificiing person).  
   
இடது பக்கம் (Agnya chakra) ஆக்ஞா சக்கரம் :  ஸ்ரீ மாதாஜி!  உங்கள் அருளினால், தயவு செய்து எங்களை மன்னியுங்கள். (Please forgive me/us).

வலது பக்கம் (Agnya chakra) ஆக்ஞா சக்கரம் :  ஸ்ரீ மாதாஜி! நான் எல்லோரையும் மன்னிக்கின்றேன். என்னையும்   மன்னிக்கின்றேன். ஸ்ரீ மாதாஜி! உங்கள் அருளினால், என்னை எப்பொழுதும் உங்கள் கவனத்தின்மேல் இருக்கச் செய்யுங்கள். (Please keep me in your attention).
 


எ. சகஸ்ராரம்  

தெய்வம் :    ஸ்ரீ கல்கி (ஸ்ரீ மாதாஜி)
தத்துவம் : - மெய்ஞானம்
                - ஆனந்தம்
                -  அமைதி
                -  எண்ணங்களற்ற தன்மை
                -  முழுமையான சுதந்திரம்

நடுச்சக்கரங்களில் நாம் கூற வேண்டியவை :

(Sahasrara) சகஸ்ராரா : ஸ்ரீ மாதாஜி! தயவு செய்து எனக்கு ஆன்ம விழிப்புணர்வு (Self-realisation) கொடுங்கள்.

இடது பக்கம் (Right Sahasrara) வலது சகஸ்ராரா : ஸ்ரீ மாதாஜி! உங்கள் அருளினால் நான் எனது வைராக்கியத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றேன். அதோடு எனது ஆன்ம முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் சவால்களை எல்லாம் வெற்றி கொள்வேன். (I am protected from all the challenges & I will be victorious over all the challenges to my ascent).

(Whole Left-side) : ஸ்ரீ மாதாஜி! உங்கள் அருளினால் நான் தூய ஆன்மாவின் மீது கவனத்தைச் செலுத்தும்  அதிர்ஷ்டத்தைப் பெற்றிருக்கின்றேன்.
(I am fortunate to be in the attention of the Holy Spirit).

வலது பக்கம் (Left Sahasrara) :  ஸ்ரீ மாதாஜி! நீங்களே எனது முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள சவால்களை நீக்கி வெற்றி அளிக்கிறீர்கள்.
(You are the victory over all the challenges to my ascent).

(Whole Right-side) :     ஸ்ரீ மாதாஜி! நீங்களே தூய ஆன்மா (You are the Holy Spirit).

 அதோடு நீங்கள் செய்யும் தொழிலைப் பொறுத்து  மாதாஜியிடம்  கேள்வி கேட்கவும். உதாரணமாக நீங்கள் ஆசிரியராக இருந்தால், "ஸ்ரீ மாதாஜி! நீங்கள் ஆசிரியர்களுக்கு  எல்லாம் ஆசிரியரா?" என்று கேட்க வேண்டும்.

பின் "ஸ்ரீ மாதாஜி! நீங்கள் தான் ஆசிரியர்களுக்கு  எல்லாம் ஆசிரியர்" என்று சொல்ல வேண்டும்.    

மஹா மந்திரம் :  

                       1.  ஓம் த்வமேவ சாக்க்ஷாத் ஸ்ரீ மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதி, மஹா காளி, த்ரிகுணாத்மிகா,
                                 குண்டலினி  சாக்க்ஷாத் ஸ்ரீ ஆதி சக்தி மாதாஜி ஸ்ரீ நிர்மலாதேவி நமோ நமஹா.

                       2.  ஓம் த்வமேவ சாக்க்ஷாத் ஸ்ரீ கல்கி சாக்க்ஷாத்
                                 ஸ்ரீ ஆதி சக்தி மாதாஜி ஸ்ரீ நிர்மலாதேவி நமோ நமஹா.
 
                       3.  ஓம் த்வமேவ சாக்க்ஷாத் ஸ்ரீ கல்கி ஸ்ரீ சகஸ்ரார ஸ்வாமினி மோக்க்ஷப் ப்ரதாயினி மாதாஜி ஸ்ரீ நிர்மலாதேவி நமோ நமஹா.

                                                    நாடிகளும், தத்துவங்களும்

இடது நடு  வலது
இடநாடி சுழுமுனை  நாடி பிங்கள  நாடி
இடது பக்கம் முழுவதும் நடு  வலது பக்கம்
கடந்த காலம் நிகழ்  காலம் எதிர்காலம்
சந்திரனின் பாதை மேன்மையுறும் பாதை சூரியனின்  பாதை
மஹா காளி மஹாலக்ஷ்மி மஹா சரஸ்வதி
பைரவா கணேஷா ஹனுமான்
ஸ்ரீ சந்திரமாதா      - ஸ்ரீ சூர்யா
          -      - ஸ்ரீ யமுனா
தேவதூதுவன் மைக்கேல்     - -  தேவதூதுவன்
             -  - கேப்ரியல்
குளிர்ச்சி சம  சீதோஷணம் உஷ்ணம்
இச்சா சக்தி  ஞான சக்தி க்ரியா சக்தி
பக்தி யோகம்  ஞான யோகம்  கர்ம யோகம்
ப்ரோடான்  வேலன்சி எலக்ட்ரான்
(நேரமின் வாயுள்ள பொருட்கூறு) (வேதியில் இணைவு) (மின்னணு)
 தமோ குணம் சத்வ  குணம் ரஜோ குணம்
 உள்ளுணர்வு உணர்வு  நிலை மேலுணர்வு
அனுகூலமான ஆதாரம் தன்மதிப்பு
வெண்மை கலந்த நீலம் தங்க நிறம் வெண்மை கலந்த ஆரஞ்சு
மமகாரம் முன்னேற்றம் அகங்காரம்