ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஏற்கனவே ஒரு அமைப்புமுறை உள்ளது, அதன் மூலம் தன்னிச்சையான விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். சக்தி வாய்ந்த சூட்சும மண்டலம் பற்றிய ஞானமும், அது நம்மைப் பல நூற்றாண்டுகளாக கட்டுப்படுத்தி, முறைப்படுத்தி, நிர்வகித்து வருவது நன்கு பாதுகாக்கப்பட்ட ஒரு இரகசியமாகவே இருந்து வருகிறது .
ஏழு பெரும் சக்தி மையங்களைக் கொண்ட "சக்கரங்கள்' மற்றும் மூன்று நாடிகள் என்று அழைக்கப்பட்டுவரும் இந்த மண்டலம்தான் நாம் நன்றாக இருப்பதற்கும், சந்தோஷம் மற்றும் ஆத்ம விழிப்புணர்வுக்கும் இன்றியமையானதாகும்.
இந்த ரகசியத்திற்குக் காரணமான சக்தியைப் பல பெயர்களால் அழைக்கப்பட்டுகிறது, ஆனால் இது பெரும்பாலும் குறிப்பிடப்படுவது "குண்டலினி" (சமஸ்கிருதத்தில் "குண்டல்" என்பதற்கு "சுருள்" என்று பொருள்)




